
கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் அசாத் மௌலானாவின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை இக்ரா வீதியில் அமைந்துள்ள அவரது தயாரின் வீட்டிற்கே இன்று அதிகாலை 1.30க்கு கைகுண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீட்டின் முன்பக்கத்தில் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றே இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment