.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, November 5, 2008

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்க தூதுவர் ரெபெர்ட் ஓ பிளெக் வாழ்த்து தெரிவித்தார்.


இலங்கையில் புதிய அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எவ்வாறு பரபரப்பாக உணரப்படுமோ, அவ்வாறானதொரு உணர்வையே புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் தெரிவையும் தான்னால் உணர முடிவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெபெர்ட் ஓ பிளெக் தெரிவித்தார்.


அத்துடன், வெற்றிபெற்ற கருப்பின ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சி அமையும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெபெர்ட் ஓ பிளெக் குறிப்பிட்டார்.

No comments: