
வவுனியா பிரதேசத்தில் வெளிநாட்டு நாணயத்தாள்களை பாதணிக்குள் மறைத்து கொண்டுச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
வவுனியா - இரட்டைப்பெரியகுளம் பிரதேசத்தில் வைத்து சந்தேகத்திற்குரிய இளைஞர் ஒருவரை சோதனைக்குட்படுத்திய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் அணிந்திருந்த பாதணியை சோதனைக்குட்படுத்திய போது அதிலிருந்து வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டன.
இந்த நாணயத்தாள்கள் சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியுடவை எனத் தெரிவித்த வவுனியா பொலிஸார், இளைஞரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment