.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, November 5, 2008

சிலாபம் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


சிலாபம் - பஜார் வீதிப் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.


இந்த நில நடுக்கம் இன்று காலை 9.40 அளவில் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இந்த நில நடுக்கத்தினால் குறித்த பஜார் வீதி பிரதேசத்திலுள்ள கட்டிடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் கேணல் மனோஜ் புதுநாயக்க தெரிவித்தார்.


அத்துடன், குறித்த புவி நடுக்கத்தினால் உயிர்ச் சேதங்களோ, பொருட்சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவித்த மனோஜ் புதுநாயக்க, இந்த நில நடுக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.

No comments: