
பேராதனை பல்கலைகழகத்தில் இடம்பெற்றுவரும் மோதல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அந்த பல்கலைகழக மாணவ மாணவிகள் பேரணி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார பீட மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன் வைத்தே இந்த பேரணி நடத்தப்பட்டதாக பல்கலைகழகத்தின் மாணவ சங்கத் தலைவர் சந்தன செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த பேரணியானது பேராதனை பல்கலைகழகத்திலிருந்து கண்டி நகர் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பீடத்திலுள்ள மாணவர்களுக்கு கடந்த 2 வருட காலமாக படத்துடன் தொடர்புடை நடைமுறையான பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற பிரச்சினையை முன்வைத்தே இந்த தொடர் அணி இடம்பெற்றதாக பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் தெரிவித்தார்.
இந்த பேரணி காரணமாக கண்டி கொழும்பு மார்க்கத்தின் பேரதனை வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment