
யாழ்ப்பாணம் வடமராட்சி அளவெட்டி பிரதேசத்தை சேர்ந்த ஆலய பூசகர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் யாழ். மனித உரிமை ஆணைக்குழு பணிமனையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆலயத்திற்கு நாளாந்த கடமைக்கு சென்றிருந்த நிலையில் இவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
40 வயதான ஐயாதுரை சண்முகவேல் என்ற பூசகரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேதீஸ் என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா புவணேஸ்வரன் என்ற மாணவரே காணாமல் போயுள்ளார்.
அளவெட்டியில் உள்ள தனது வளர்ப்பு தந்தையின் வீட்டில் இருந்த வேளையிலேயே அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment