.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

கிளிநொச்சி வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு பகுதிகள் மீது விமானப் படையினர் தாக்குதல்.


கிளிநொச்சியின் இருவேறு பகுதிகள் மீது இன்று மாலை விமானப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதலானது கிளிநொச்சியின் வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு ஆகிய பகுதிகள் மீதே மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.


முதலாவது விமானத் தாக்குதலானது 6.05க்கும் மற்றைய தாக்குதலானது 6.10 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த பகுதிகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிகளுக்கு சொந்தமான தலங்கள் மீதே இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


ஜெட் விமானங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது வெற்றியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: