
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அவரது அலுவலகத்தில் இருந்த வேளையில் அங்கு வந்த இனந்தெரியாதோர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment