.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

யாழ். பருத்தித்துறை முனைக்கடலில் வெளிச்சவீட்டு பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.


யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனைக்கடலில் வெளிச்ச வீட்டுப் பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.


இன்று காலை கரை ஒதுங்கியுள்ள இந்த சடலமானது உரு குலைந்து அழுகிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சடலம் தொடர்பாக மரண விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை நீதவான் ஏ.எஸ். அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை வைத்தியசாலையின் பிரேத அரையில் 5 நாட்கள் சடலத்தை வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன் சடலம் அடையாளம் காணப்படாத பட்சத்தில் வைத்தியசாலையின் தலைமையில் சடலத்தை அடக்கம் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: