
வவுனியா ஹொரவப்பத்தான வீதியில் நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது நேற்றிரவு 8.20 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
நேற்றிரவு வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இவர் கடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் ஹொரவப்பத்தான வீதியிலுள்ள இரம்பைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே அவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவராசா கோபால கிருஷ்ணன் என்ற தமிழ் இளைஞனே கடத்தப்பட்டவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

No comments:
Post a Comment