
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார.
தேர்தல் முடிவுகள் குறித்தும், பராக் ஒபாமாவின் வெற்றி குறித்தும் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியினை ஜனாதிபதி இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகர் ரொபர்ட் ஒ பிளேக்கிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒபாமாவின் வருகை இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

No comments:
Post a Comment