.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 13, 2008

இலங்கை மீனவர்களுக்கு தற்பாதுகாப்பு அங்கி அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.


மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட மீனவப் படகுகளில் தற்பாதுகாப்பு அங்கிகளை வைத்திருக்க வேண்டும் என மீன் பிடி மற்றும் நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.


மோட்டார் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள், பைபர் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் படகின் வெளிப்புறத்தில் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகளிலேயே இந்த தற்பாதுகாப்பு அங்கிகளை வைத்திருக்க வேண்டுமென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


படகொன்றில் பயணிக்கும் மீனவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தற்பாதுகாப்பு அங்கிகளின் எண்ணிக்கைகளும் இருப்பதுடன், அந்த அங்கிகள் பற்றிய குறித்த மீனவர்களுக்கு அறிவூட்டல் வழங்கப்பட்டிருத்தல் வேண்டுமெனவும் மீன் பிடி மற்றும் நீர்வள அமைச்சு கூறியுள்ளது.


அத்துடன், படகுகளில் வைத்திருக்கும் பாதுகாப்பு அங்கிகளை தொழிலுக்குச் செல்லும் முன்பாக ஒவ்வொரு தடவையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: