
நாட்டு மக்களை தீவிரவாதம் மற்றும் வறுமையில் இருந்து பாதுகாக்க வேண்டியது அரச தலைவர்களின் பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.
வங்கால விரிகுடாவிற்கு அண்டியுள்ள நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களின் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுயது அவசியம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்திய புதுடில்லியில இன்று நடைபெற்ற தொழில்நுட்ப மற்றும் பொளாதார ஒத்துழைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உணவுத் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை உலகம் முழுவதிலும் உள்ள சகல நாடுகளும் எதிர்நோக்கி வருகின்றன.
இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான சிறந்த திட்டமொன்றை வங்கால விரிகுடா நாடுகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டிற்கு கலந்து கொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க பிம்ஸ்டெக் மாநாடானது ஆசிய நாடுகளுக்கு ஒரு சிறந்த பாலமாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment