
மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர் விநியோக மையங்களின் பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, அதிகளவான பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மின் பிறப்பாக்கிகள், மின் உற்பத்தி நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமாக எவரேனும் நடமாடினால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment