.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, November 2, 2008

முல்லைத்தீவு – இரணமடு பிரதேசத்தின் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப் படையினர் தாக்குதல்.


முல்லைத்தீவு – இரணமடு பிரதேசத்தின் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதல் இன்று காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.


முல்லைத்தீவு - இரணமடு பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மற்றும் ஆயுதசாலையின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த தாக்குதலுக்கு ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதாகவும், தாக்குதல் வெற்றியளித்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார கூறினார்.

No comments: