.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 1, 2008

கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் வடகடலில் கடும் மோதல்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளுக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் வடகடலில் பருத்தித்துறைக்கு அண்மையில் பாரிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்தத் தாக்குதலில் கடற்படையினரின் டோராப் படகு மூழ்கடிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒரு அதிவேகப் படகு சேதம் அடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலானது இன்று அதிகாலை 5 மணிமுதல் 7 மணிவரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த மோதலிலில் சேதம் அடைந்த படகுடன் படையினர் காங்கேசன் துறையை நோக்கி பின்வாங்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினர் தரப்பில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் 7 கடற்புலிகள் உயிரிழந்துள்ளதாக புலிகள் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: