.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

அம்பாறை துறைநீலாவணை பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது


அம்பாறை துறைநீலாவணை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுவரும் குடியிருப்பு பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


இந்த சடலத்தினை குறித்த பிரதேசத்திலிருந்து நேற்றிரவு மீட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


சடலமாக மீட்கப்படவர் 25 வயதுடைய ரம்ழான் பைரூஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அத்துடன், மீட்கப்பட்ட சடலத்தில் அடி காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: