
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்;. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒருவர் சரணடைந்துள்ளார்.
இவர் இன்று காலை சரணடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சரணடைந்தவர் 27 வயதுடையவர் எனவும், உடுவில் றோட் மானிப்பாயைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment