.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 6, 2008

யுத்தடம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை.


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள மேலுமொரு தொகுதியினரை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலமீன்மடு, கிரிமிட்டி, பாலைச்சேலை, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு சிங்கள மஹா வித்தியாலய முகாம், சாஹிராக் கல்லுரி, சின்னஊறணி நலன்புரி முகாம் மற்றும் கொக்குவில் 1, 2 ஆகிய முகாம்களிலுள்ள மக்களே மீள் குடியேற்றப்படவுள்ளனர்.

குறித்த பகுதிகளில் தங்கியுள்ள 70 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேரே இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவர்களை திருகோணமலை – சம்பூரிலுள்ள கட்டப்பறிச்சான் வடக்கு பிரதேசத்தில் மீள் குடியேற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

No comments: