
அரச பாடசாலைகளின் தவணை இறுதி பரீட்சைகளை தேசிய மட்டத்தில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிங்களம், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சமயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களையே தேசிய மட்டத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்திலுள்ள மாணவர்களின் திறமைகளை அவதானிப்பதே இதன் நோக்கம் எனவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், சகல பாடசாலைகளில் உள்ள பாடத் திட்டங்களை சம நிலைப்படுத்த இந்த திட்டம் வழிவகுக்குமெனவும் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment