
கொழும்பு - ஒருகொடவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாலத்தின் அமைவு காரணமாக அதனை அண்டிய பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
இந்த நீர் வெட்டு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் ஞாயிறுக்கிழமை காலை 9 மணிவரை இடம்பெறுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ஒருகொடவத்தையை அண்டிய பகுதிகளான பேஸ்லைன் வீதி, பொரல்லை, மாளிகாவத்தை, மட்டக்குளிய காக்கைத்தீவு, கொட்டாஞ்சேனை, விவேகானந்த மாவத்தை மற்றும் வித்தியாலய மாவத்தை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த நீர் வெட்டு இடம்பெறுமெனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

No comments:
Post a Comment