
புத்தளம் - வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரால்குழி கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரை தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் முப்படையினர் இந்த தேடுதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இரால்குழி கிராமத்தில் உள்ள 76 வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், 205 பேர் விசாரணை செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்;தக்கது.
இவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment