.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 8, 2008

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்றைய தினம் வன்னிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்


இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்றைய தினம் வன்னிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காகவே இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னிக் களமுனையில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படைத் தளபதிகளுடன் இராணுவத் தளபதி விசேட சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.

வன்னிப் படைத் தலைமையகத்தில் படைத் தளபதிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வன்னியில் முன்னெடுக்கப்படும் யுத்த முன்நகர்வுகள் குறித்து வன்னிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதிக்கு விளக்கமளித்துள்ளார்.

இடம்பெயர் மக்களுக்கான உணவு விநியோகம் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள பாடசாலை மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை தொடருவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாகத் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: