.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

நாச்சிக்குடா பிரதேசத்தின் மீது விமானப்படையினர் தாக்குதல்.


நாச்சிக்குடா பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


இந்த தாக்குதலை நேற்று மாலை 6.10 அளவில் மேற்கொண்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.


நாச்சிக்குடா பிரதேசத்திலிருந்து 1.2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஒன்று கூடும் இடத்தின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


இந்த தாக்குதலுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாகவும், தாக்குதல் வெற்றியளித்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார கூறினார்.


No comments: