
அம்பாறை - கல்முனை - வாடிவீடு வீதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வாடிவீடு வீதியிலுள்ள கடற்கரையில் உள்ள உணவகவும் முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தபொலிஸார், காயமடைந்தவர் அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

No comments:
Post a Comment