
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியின் பாதுகாப்பு பணிகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 29 திகதி முதல், கந்தளாய் 84வது பிரதான காவற்துறை சோதனை சாவடி ஊடாக வாகனங்களில் பயணிக்கும் சகல நபர்களினதும் அடையாளத்தை உறுதிப்படுத்த, முழுமையான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர திருகோணமலை மாவட்டம் முழுவதும், இரவும் பகலும், வீதி ரோந்து பணிகள் மற்றும் நடமாடும் ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றிவளைப்புத் தேடுதல்கள், காடுகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ரயில் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தவிர திருகோணமலை நகரிலுள்ள சகல பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வென்னீர் ஊற்று, சேருவில் நகரம், நிலாவெளி, வில்கம்வெஹர ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அச்சமடைய தேவை இல்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment