.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 1, 2008

இலங்கை அரசுக்கு சொந்தமான யுத்த ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ளன


தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த செவ்வாய் கிழமை மன்னார் தள்ளாடி முகாம் மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலில் எம்.ஐ தாக்குதல் ஹெலிகொப்டரும், களத்தில் காயமடையும் படையினரை எடுத்துச் செல்லும் பெல் ஹெலிகொப்டரும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் எதுவித பாரிய சேதங்களும் ஏற்படவில்லை என இலங்கைப் படைத்தரப்பு கூறியிருந்ததுடன் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் மாத்திரம் காயங்களுக்கு உள்ளானதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படையினர் 7 எம்.ஐ. ஹெலிகொப்டர்களை இழந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவினரின் தாக்குதல்களில் 5 ஹெலிகொப்டர்கள் அழிவடைந்ததுடன் மேலும் இரண்டு எம்.ஐ. 24 ஹெலிகொப்டர்கள் விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளில் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: