
புத்தளம் - கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு மற்றும் பணையடி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது 93 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேடுதலை இன்று காலை 5 மணி தொடக்கம் 8 மணி வரை மேற்கொண்டதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் 180 வீடுகளில் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேடுதல்களை விஷேட பொலிஸ் பிரிவு மேறகொண்டதாகவும் கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேரை விஷேட பொலிஸ் பிரினர், கல்பிட்டி பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும், இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சிய அனைவரையும் விசாரணைகளின் பின்னர் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment