.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

அவசர கால நீடிப்புச் சட்டம் 75 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது


அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் நிறைவெற்றப்பட்டது.


இதன்படி அவசரகாலச் சட்டமூலம் 75 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 85 வாக்குகளும், அதற்கு எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.


அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து ஜே.வி.பி., ஜாதிக்க ஹெலஉறுமய, மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன ஆதரவாக வாக்களித்தன.


அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது.


அத்துடன் வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி அவையை விட்டு வெளிநடப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: