.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 6, 2008

கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து கட்டுப்பாட்டு பிரதேசத்தில் 5 பேர் வந்தடைந்துள்ளனர்.


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களினால் உயிர் அச்சுறுத்தல் காரணமாக 5 பேர் அகதிகளாக வவுனியாவிற்கு வந்தடைந்துள்ளதாக வவுனியா அரச செயலகம் தெரிவித்துள்ளது.


கடந்த 22 திகதி முல்லைத்தீவில் இருந்து கடல் மார்கமாக புறப்பட்டு வந்த வேளையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் பின்னர் இவர்கள் அனைவரும் வவுனியாவுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும், இவர்கள் வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச செயலகம் மேலும் தெரிவித்தள்ளது.

No comments: