
இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் தலைமையில் சேகரிக்கப்பட்டுவரும் நிவாரண தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிவாரண தொகை 4.5 கோடி ரூபா சேர்ந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நடைபெற்றுவரும் யுத்ததினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு உதவ தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி 10 லட்சம் ரூபா தொகையை கொடு;த்து ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், நேற்றைய தினம் நடைபெற்ற நடிகர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் போது 50 லட்சத்திற்கு அதிகமான தொகை நடிகர்களால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகர்கள் சார்பாக சேர்க்கப்பட்ட நிதி தொகையில் நடிகர் ரஜினி காந்த் 10 லட்சம் ரூபாவையும், கமலாஹசன் 5 லட்சம் ரூபா மற்றும் அஜித் 5 லட்சம் என அனைத்து நடிக, நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கென நிவாரண நிதி தொகையினை வழங்கியுள்ளனர்.இந்த நிவாரண நிதி சேர்க்கும் நடவடிக்கை கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், 29ஆம் திகதி 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரம் சேகரிக்கப்பட்டிருந்து.
இதே தொகை கடந்த 31ஆம் 3.5 கோடியை நெருங்கியது. தற்போது இந்த தொகை 5 கோடியை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment