
குவைத் - இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 40 வருடம் பூர்த்தியடைந்துள்ளது.
ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்ற வேளையில், இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ள குவைத் விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இந்த 40 வருட விமான சேவை பூர்த்தியை முன்னிட்டு குவைத் விமான சேவை நிறுவனத்தின் தலைவரான ஹமீட் லத்தீவ் அல்ஹலா உள்ளிட்ட குழுவொன்று இன்று இலங்கை வந்தடைந்துள்ளது.
இவர்கள் அனைவரும் குவைத் விமான நிலையத்திற்குச் சொந்தமான மு.ளு.360 இலக்க விமானத்தில் இன்று காலை 6 மணியளவில் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையின் 40 ஆண்டு பூர்த்தி நிகழ்விற்கு இலங்கைக்கான குவைத் தூதுவர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:
Post a Comment