.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, November 7, 2008

அம்பாறை மாஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி


அம்பாறை மாவட்ட மாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பிட்டிய கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றதாக மா ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் ஊர்காவல் படை வீரர்கள் இருவர்களுமே கொல்லப்பட்டவர்களாவர்.


இவர்கள் இருவரும் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில், அங்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இந்த துப்பாக்கி பிரையோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஓர் ஊர்காவற்படை வீரர் மாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்டவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மாஓயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என மா ஓயா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மாஓயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: