
ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரி பொலிஸ் திணைக்களம் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு ஒரே இடத்தில் பணிபுரியும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் விபரங்களை உடனடியாக பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரியும் போது குற்றச் செயல்கள், மற்றும் மோசடிகள் போன்ற செயல்கள் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு 3 வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் பணிபுரியும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பொலிஸ் திணைக்களம் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment