.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

கிளிநொச்சிக்கு 29 லொறிகளில் அத்தியவசிய உணவுப் பொருட்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.


அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 29 லொறிகள் கிளிநொச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளன.


இன்று முற்பகல் அளவில் இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் லொறிகள் வவுனியாவில் இருந்து கிளிநோச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக இராணுவ ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


உலக உணவுத் திட்டத்திற்கு சொந்தமான இந்த 29 லொறிகளில் 68 மெற்றிக் தொன் அரிசியும், 208 மெற்றிக் தொன் கோதுமை மா, 76 மெற்றிக் தொன் பருப்பு, மற்றும் 24 மெற்றிக் தொன் சீனி ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த உணவுப் பொருட்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: