.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 6, 2008

2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் இன்று சமர்பித்தார்.


2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று பகல் ஒரு மணியளவில் சமர்பிக்கப்பட்டது.


நாடு தீவிரவாத அழுத்தங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற வேளையிலும் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை எவ்வாறு துரிதமாக மேற்கொள்வது என்பது தொடர்பாக இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவு திட்ட யோசனை மீதான வாசிப்பின் போது குறிப்பிட்டார்.


விசேடமாக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனநாயக முறையை கையாண்ட போதிலும் அவை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் யுத்தத்தின் மூலம் தீவிரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் ஒரு போதும் பின்வாங்காதென ஜனாதிபதி வரவு செலவு திட்ட வாசிப்பு உரையின் போது குறிப்பிட்டார்.


அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து ஜனநாயக முறைக்கு திரும்ப வேண்டும், இல்லாவிடின் இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் மண்டியிட ஏற்படுமென ஜனாதிபதி 2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை மீதான வாசிப்பின் போது தெரிவித்தார்.

No comments: