.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, November 6, 2008

2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த இன்று சமர்பித்தார்.


அரச ஊழியர்களுக்கான நிவாரணம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் முன்வைக்கப்பட புதிய வரவு செலவு திட்டத்தினூடாக அரச சேவையில் உள்ளவர்களுக்கு பல நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அரச ஊழியர்களுக்கு இதுவரை பெற்றுக் கொடுக்கப்பட்ட 1000 ரூபா வாழ்க்கைச் செலவு படி தொகையை அதிகரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனை ஒன்றை முன் வைத்துள்ளார்.


அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு படி தொகையை 4500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.


அரச ஊழியர்களுக்காக வழங்கப்படும் இந்த வாழ்க்கைச் செலவு படி கொடுப்பனவுக்காக அரசாங்கம் 12 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.


மேலும், இதுவரை அரச ஊழியர்களுக்காக முற்பணமாக வழங்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாவை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன், அரச ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக முற்பணமாக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாவை 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கவும் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.


அத்துடன், அரச ஊழியர்களுக்காக வழங்கப்படும் அனர்த்த கடன் சலுகையை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் வரவு செலவு திட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அனர்த்த கடன்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவிலிருந்து 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாகஇன்று சமர்பித்த வரவு செலவு திட்ட யோசனை மீதான வாசிப்பின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.


இதேவேளை, ஓய்வுதியம் பெறுவோருக்கு வாழ்க்கை செலவு படி தொகைக்கு மேலதிகமாக 500 ரூபாவை மாதம் ஒன்றிற்கு வழங்க வரவு செலவு திட்ட யோசனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஓய்வுதிய கொடுப்பனவை மேலும் 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக 2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓய்வு பெறாத அரச ஊழியர்களுக்காக வழங்கப்படும் சேவை கால நிதியுடன் மாதமொன்றுக்கு 500 ரூபா வீதம் கொடுப்பனவொன்றை வழங்க ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2009ஆம் நிதியாண்டுக்காக வெளியிடப்பட்ட வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேசிய வருமானம்


அதேவேளை, கடந்த 4 ஆண்டு காலத்திற்கு நாட்டின் தேசிய வருமானத்தை 398 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவு திட்ட வாசிப்பின் போது தெரிவித்தார்.


அதன்படி, 2004ஆம் ஆண்டில் 311 பில்லியனாக காணப்பட்ட நாட்டின் தேசிய வருதமானம், 2008ஆம் ஆண்டின் போது 709 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த காலப்பகுதிக்குள் அரசினால் வரிவருமானமாக 138 மில்லியன் ரூபாவாக ஈட்ட முடிந்ததுடன், தேசிய உற்பத்திகள் மூலம் 16 வீத வருமானத்தை அரசினால் பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


2004ஆம் ஆண்டில் 100 வீதமாக இருந்த அரசு படுகடன் 85 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவு வாசிப்பின் போது குறிப்பிட்டார்.


இதேவேளை, 2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்ட வாசிப்பின் போது நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.


பெற்றோல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைப்பு.


அதன்படி, பெற்றோர் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவாலும். மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


தற்போது 157 ரூபாவாக உள்ள பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 142 ரூபாவிற்கும், 110 ரூபாவாக உள்ள டீசல் லீட்டர் ஒன்றின் விiலா 80 ரூபாவிற்கும், 80 ரூபாவாக உள்ள மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவிற்கும் விநியோகிக்கப்படும் என நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


அத்துடன், எதிர்வரும் மாதங்களில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலைக்கேற்ப எரிப்பொருட்களின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


வரவு செலவு திட்ட யோசனை மீதான வாசிப்பை தொடர்ந்த நிதி அமைச்சர், இந்த எரிப்பொருள் விலைத் திருத்தங்களுக்கேற்ப பஸ் கட்டணம் 25 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments: