.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

2009ம் நிதி ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையில் இரண்டு விதந்துரைகள் அரசியல் அமைப்புக்கு முரணாக உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு.


2009ம் நிதி ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையில் இரண்டு விதந்துரைகள் அரசியல் அமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடியபோது, அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட யோசனையின் குறைநிரப்பு பிரேரணை கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.


அந்த குறைநிரப்பு பிரேரணையை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இந்த அறிவித்தலை செய்துள்ளதாக சபாநாயகர் லொக்குபண்டார தெரிவித்தார்.


அதன்படி குறைநிரப்பு பிரேரணையின் 6, 1 மற்றும் 2ன் முதலாம் பிரிவு ஆகியன பிரேரணைக்கு முரணாக காணப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இந்த பிரேரணைகளை ஆராய்ந்த பின்னரே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அத்துடன் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையைப் பெறுவதற்கும் இந்த பிரேரணைகளை ஆராய வேண்டியது அவசியம் எனவும் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.


2009ம் நிதியாண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையை இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த வேளையில் அதிலுள்ள விதந்துரைகள் அரசியல் அமைப்புக்கு முரணாக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கான தீர்ப்பையே உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: