.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, November 1, 2008

2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 6ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது


2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசினால் தயாரிக்கப்பட்ட நான்காவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 6ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்ட யோசனை மீதான விவாதங்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகும் வரவு செலவுத் திட்ட யோசனை மீதான விவாதங்கள் 15ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன் மூன்றாவது வாசிப்பு 17ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுது. அன்றைய தினம் முதல் ஆரம்பமாகும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 28ம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன் இந்த விவாதங்கள் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி 2009ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பும் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: