
கடந்த ஒருமாதக் காலப்பகுதிக்குள் மோதல்களினால் 171 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் W.D.J.செனவிரத்ன தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பாக விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் முப்படையினர் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 1122 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, மோதல்களினால் 38 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் W.D.J.செனவிரத்ன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment