.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, October 29, 2008

விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் மூவர் காயம் - Update


தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றிரவு மேற்கொண்ட விமானத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலின் சேத விபரங்கள் தொடர்பாக இதுவரை மதிப்பிடப்படவில்லையென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் அதுகுறித்து எவ்வித தகவல்களையும் தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் நேற்றிரவு 11.20 அளவில் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ மின் வழங்கு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பாரிய தீச்சுவாலை ஏற்பட்டது.

அந்த தீச்சுவாலை ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பில் மின்வெட்டும் நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்களுக்கு பின்னர் மீன்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: