நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலனிலை காரணமாக பாதிப்புக்குள்ளானோரின் தொகை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 519ஆக உயர்வடைந்துள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 24 ஆயிரத்து 885 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கூடுதலான தொகை கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 509 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment