.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

வன்னிக்கு இன்றும் உலருணவு லொறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன - Update


மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு வேண்டிய உலருணவு பொருட்கள் அடங்கிய லொறிகள் இன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
50 லொறிகளில் இந்த உலருணவு பொருட்கள் குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் றிஷாட் பதீயூதின் தெரிவித்துள்ளார்.
குறித்த 50 லொறிகளும் வவுனியாவிலிருந்த அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த உலருணவு பொருட்களில் கோதுமை மா, சீனி மற்றும் பருப்பு போன்ற உலருணவு பொருட்கள் இதில் அடங்குவதாகவும், இவற்றை இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை உலக உணவு திட்டத்தின் ஊடாக நேற்றைய தினம் 29 லொறிகளில் உலருணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதீயூதின் கூறினார்.

No comments: