
மட்டக்களப்பு – கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மீனகன் காரியாலயத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்று மாலை 6.15 அளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்;டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி காரியாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் சேத விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment