.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

சிலாபம் - வென்னப்புவ பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலைச்.


சிலாபம் - வென்னப்புவ பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் வென்னப்பு – கம்கரு வீதியில் நேற்றிரவு 9.30 இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.


இந்த சம்பவத்தில் 24 வயதுடைய ரத்துகமகே ஹரிசந்திர என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


தனிப்பட்ட பகை காரணமாகவே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சம்பவத்தில் தொர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.


இதேவேளை, கொல்லப்பட்ட நபர் கொலை வழக்கொன்றுடன் தொடர்புடையவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: