
டிசலின் விலையை குறைக்கும் பட்சத்தில் பஸ் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உலகச் சந்தையில் எரிப்பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருவதினால் டிசலுக்கான விலையை 60 ரூபா வரை குறைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கேமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
அவ்வாறு எரிப்பொருட்களி;ன் விலை குறைக்கப்படுமாயின் பஸ் கட்டணமும் உடனடியாக குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் பிப்பாய் ஒன்றின் விலை 63 அமெரிக்க டெலராக வீழ்ச்சியடைந்துள்ளதினால் அதன் நன்மையை மக்களுக்கும் பெற்று கொடுக்க வேண்டியது நியாயமானதெனவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கேமுனு விஜேயரத்த மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment