.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Friday, October 31, 2008

இலங்கை தமிழர்களுக்கு தமிழகம் சேகரிக்கும் நிவாரண நிதி தொகை அதிகரிப்பு.


இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் தலைமையில் சேகரிக்கப்பட்டுவரும் நிவாரண தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிவாரண தொகை நேற்று வரை 3.5 கோடி ரூபா சேர்ந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கையில் நடைபெற்றுவரும் யுத்ததினால் பாதிப்படைந்த தமிழர்களுக்கு உதவ தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி 10 லட்சம் ரூபா தொகையை கொடு;த்து ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனடிப்படையில் தமிழக முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து நிவாரண நிதிகளை முதலமைச்சரிடம் வழங்கி வருகின்றனர்.


இந்த நிவாரண நிதி சேர்க்கும் நடவடிக்கை கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 29ஆம் திகதி அன்று 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரம் சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: