.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் மாணவன் பலி.


இலங்கை விமானப்படையினரின் விமானத்தாக்குதலுக்கு இலக்காகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விமானத் தாக்குதல் இன்று காலை 9.30 அளவில் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.


முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையில் ஜெட் விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த தாக்குதலை வள்ளிப்புனம் மக்களின் குடியிருப்புக்கள் மீதே இலங்கை விமானப் படையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தாக்குதலில் கொல்லப்பட்டவர் 15 வயதுடைய செல்வராசா சதீஸ்கரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


குறித்த தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Vinodh Kumar said...

No one will reduce our thrust for freedom.

Liberty is our final destination