
முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பகுதி மீது விமானப்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விமான தாக்குதலானது இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.
இந்த தாக்குதலானது பொட்டு அம்மனின் பயிற்ச்சி முகாமிலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புதுகுடியிருப்பு பகுதி மீதே மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு ஜெட் விமானங்களை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங் கொமான்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார்.

No comments:
Post a Comment