.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

பொத்துவில் - உல்லை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் கடத்தல் கடத்தப்பட்டுள்ளார்


பொத்துவில் - உல்லை பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளார்.


அவர் குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனமான ICCA என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விநாயகப்புரத்தில் வசிக்கும் 28 வயதுடைய உருத்திரமூர்த்தி செல்வகுமார் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: